Thursday, October 16, 2014

சனிப் பெயர்ச்சி 2014 - மேஷ ராசிக்கான கிரகநிலை அமைப்பு

மேஷம்:
அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல்  எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

 
கிரகநிலை:
இதுவரை உங்களது சப்தம களத்திர ஸ்தானத்தில் கண்டச் சனியாக இருந்த சனி பகவான் இனி ஆயுள் ஸ்தானத்திற்கு  அஷ்டம சனியாக மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம்  பார்வையாக உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில் கர்ம  ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

 
மற்ற கிரகங்களின் நிலை:
 
குரு:
சனி மாறும் போது குரு உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால்  உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது  பார்வையால் உங்களது ராசியையும் பார்க்கிறார்.

 

ராகு:
ராகு ரண ருண ரோகஸ்தான கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது முன்றாம் பார்வையால் உங்களது  சுகஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது அயன சயன போகஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்  உங்களது ஆயுள்ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

 

கேது:
கேது அயன சயன போகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில் கர்ம  ஜீவன ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது ரண ருண ரோகஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால்  உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.



பலன்கள்: http://sanitransit.blogspot.in/2014/10/blog-post.html

உங்களுக்கான பிரத்யேக பலன்களுக்கு Email: ramjothidar@gmail.com

சனிப் பெயர்ச்சி 2014 - கன்னி


சனிப் பெயர்ச்சி 2014 - சிம்மம்


சனிப் பெயர்ச்சி 2014 - கடகம்


சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்


சனிப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்


சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்


சனிப்பெயர்ச்சி 2014 - அறிமுகம்


Monday, August 18, 2014

சனிப் பெயர்ச்சி 2014 ஸ்பெஷல்

சனி என்றால் யார்?
சனியின் பணிகள் என்னென்ன?
அவர் எவ்வாறு பயணம் செய்வார்?
அவரின் முழு பயோடேட்டா?
அவர் எங்கிருந்து எங்கே மாறுகிறார்?
பொதுப் பலன்கள் என்னென்ன?
லக்ன ரீதியான பலன்கள் என்னென்ன?
திசாபுக்தி ரீதியான பலன்கள் என்னென்ன?
சனியால் தோஷம் ஏற்பட்டால் அதற்குண்டான சரியான பரிகாரம் என்ன?

ஏழரை சனியால் யார் யாருக்கு என்னென்ன பாதகம் - சாதகம்?
அஷ்டமத்து சனியால் ஏற்படும் விளைவுகள்!
அர்த்தாஷ்டம சனியால் ஏற்படப் போகும் செயல்கள் என்னென்ன?
ஏன் சனிக்கும் சூரியனுக்கும் ஆகாது - அறிவியல் ரீதியான விளக்கம்.
திருநள்ளாறு போன்ற ஸ்தலங்களில் சென்று பரிகாரம் செய்தும் கல்வி, திருமணம், சந்தாண பாக்கியம், வேலை, வெளிநாடு வாய்ப்பு போன்றவை தள்ளிப் போவது ஏன்?

இது போன்ற அனைத்து கேள்விகளுக்கு சரியான முறையில் அடுத்தடுத்த சில நாட்களில் பலன்களும் கட்டுரைகளும் வெளிவரப்போகிறது.

காத்திருக்கவும்.


இதுவரை நீங்கள் அறிந்திராத  அரிய செய்திகள் 
முற்றிலும்  மாறுபட்ட கோணத்தில் 
சனிப் பெயர்ச்சி 2014

மேலதிக விபரங்களுக்கு: 7845119542

சனிப் பெயர்ச்சி - 2014

சனிப் பெயர்ச்சி 2014




நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார்.